பல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பம்

பல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பம்

சுகாதார அமைச்சின் துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவிக்காக பேராதனை பல்கலைக் கழகத்தின் பல் மருத்துவ பீடம் / சுகாதார அமைச்சின் மஹரகம வாய் வழி சுகாதார நிறுவனத்தின் ஊடாக நடாத்தப்படும் பல் தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வேலை விபரணம் DOWNLOAD
விண்ணப்ப படிவம் DOWNLOAD

விண்ணப்ப முடிவு : 2021-07-09

இந்த கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பயிலுனர்களின் எண்ணிக்கை 20 – 25 ஆகும்.

03. இந்த பயிற்சி நெறிக்கு மாகாணங்களில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய பயிலுனர்களின் எண்ணிக்கை அந்த மாகாணத்தில் காணப்படும் மத்திய அரசிற்கு மற்றும் மாகாண சபைக்கு உரித்தான வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

04. இந்த கற்கைநெறி ஒரு முழுநேரப் கற்கைநெறியாகும். எனவே, ஐந்து வார நாட்கள் உட்பட சனிக்கிழமை காலை நேரத்தில் பல்கலைக் கழகம் அல்லது சுகாதார அமைச்சின் கீழ் அல்லது வேறு அரச நிறுவனங்களில் வேறு எந்த முழு நேரப்பயிற்சி நெறிகளை தொடரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

எவரேனும் ஒருவர் அவ்வாறு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது அது வெளிப்படுத்துத்தப்பட்டால் பயிற்சிநெறி / பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதுவரை அரசாங்கத்தால் அவருக்காகச் செலவு செய்த அனைத்து செலவுகளும் அவரிடமிருந்து அறவிடப்படும்.

பல்கலைக் கழகமொன்றில் அல்லது வேறு அரச நிறுவனமொன்றில் முழு நேரப் பயிற்சிநெறியில் உள்ள ஒருவர் இதற்காக விண்ணப்பிக்க விரும்பினால் அதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செயற்பட வேண்டும்.

பல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு விண்ணப்ப முறை :

முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய மாதிரிப்படிவத்தையும் இணைத்து அந்த கடித உறையின் இடதுபக்க மேல் முனையில் “துணை மருத்துவ சேவையின் பல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சி நெறிக்கான பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு- 2021″ எனக் குறிப்பிட்டு, அதற்குக்கீழ் நீங்கள் கோரும் மாகாணம் மற்றும் மாவட்டம் என்பவற்றைக் குறிப்பிட்டு 2021.07.09 ஆந் திகதிக்கு முன்னர்; ”பணிப்பாளர் (நிர்வாகம்- நிறுவனம்),இலக்கம் 26, மெடி ஹவுஸ் கட்டிட தொகுதி, 4ஆம் மாடி, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10″ எனும் முகவரிக்கு கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும்.

Check This Jobs Also :

பூரணமற்ற, மாதிரிப்படிவத்திற்கு அமையாத மற்றும் அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்யாத, வங்கி பற்றுச்சீட்டு ஒட்டப்படாத மற்றும் 2021.07.09 திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தல்களும் இன்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்களை நிரப்பும் போது கல்வி மற்றும் ஏனைய தகைமைகளை மிகவும் கவனமாகவும் சரியாகவும் நிரப்பப்படல் வேண்டும்.

பயிற்சிகளின் போது அல்லது நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கும், வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்து பயிற்சியிலிருந்து / பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதுடன், அது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அரச சேவையில் இணைய முடியாதவாறு திருப்தியின்மை பட்டியலில் அவரது பெயரை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் பயிற்சிக் காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட செலவினங்கள், பிணைக்கான நிதி என்பவை அவரிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்