2020 க.பொ.த (சா/த) பூர்த்தி செய்த மாணவர்களுக்கான மூன்று மாத பாடநெறிக்கு பயிலுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பித்தல்

2020 க. பொ. த. (சா/ த) பூர்த்தி செய்த மாணவர்களுக்கான மூன்று மாத பாடநெறிக்கு பயிலுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பித்தல்

தேசிய இளைஞர் படையணியின் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி நிலையங்களில் 2020 ஆம் ஆண்டின் க. பொ. த. (சா/ த) முடித்த மாணவர்களுக்கான மூன்று மாத பாடநெறி (மென் திறன்) க்காக மாணவர் இணைப்பு இடம்பெறுகின்றது. இந்தப் பாடநெறி வதிவிடமற்ற, முழு நேர, இலவசமாக நடாத்தப்படும் பாடநெறியாகும்.

பாடநெறிக்கு விண்ணப்பித்தல்.-

தேசிய இளைஞர் படையணி பயிற்சிப் பாடநெறி இடம்பெறும் நிலையங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாங்கள் விரும்பிய நிலையத்தை தெரிவு செய்து குறித்த மாவட்டத்தின் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்திற்கு பதிவு செய்யப்பட்ட தபாலில் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Details

Download Application

விண்ணப்பத்தை பதிவுத் தபாலில் அனுப்பும் போது காகித உறையின் இடது பக்கத்தில் ”2020 க. பொ. த. சா/ த முடித்த மாணவர்களுக்கான மூன்று மாத பாடநெறி” என குறிப்பிடப்படுவதுடன் மின்னஞ்சலில் அனுப்பும் போது மின்னஞ்சலின் விடயம் என்ற இடத்திற்கு ”2020 க. பொ. த. (சா/த) முடித்த மாணவர்களுக்கான மூன்று மாத பாடநெறி” எனக் குறிப்பிடப்படல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் 2021, மாச்சு 29 ஆந் திகதியாகும்.

மேலதிக விபரங்களுக்கு

தங்களுக்கு அண்மையிலுள்ள பயிற்சி நிலையத்திற்கு அல்லது கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்.

  • தொலைபேசி இலக்கம் : 011-2688885 / 071-0377377
  • பெக்ஸ் இலக்கம் : 011-2684784
  • மின்னஞ்சல் : application@youthcorps.lk
  • இணையத்தளம் :  www.youthcorps.lk
  • முகநூல் :  National youth corps
  • தலைமை அலுவலகம் :  இலக்கம் 420, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.

தேசிய இளைஞர் படையணி பாடநெறியின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் :

  • ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
  • இயல், இசை, நடன, நாடக மற்றும் மேடைத் திறன்களுக்கு எமது கைகொடுப்பு
  • நீங்கள் தெரிவு செய்த தொழிற் பயிற்சி பாடநெறிக்கு உட்படுத்தப்படுவீர்கள்
  • திறமைமிக்க பயிலுநர்களுக்கு விசேட பாடநெறிக்கான முழுமையான புலமைப் பரிசில்

 

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்