உதவிப் பணிப்பாளர் வேலைவாய்ப்பு திறந்த போட்டிப் பரீட்சை – அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

Assistant Director Employment Open Competitive Examination - Government Services Commission

உதவிப் பணிப்பாளர் வேலைவாய்ப்பு திறந்த போட்டிப் பரீட்சை – அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களத்திற்கு உதவிப் பணிப்பாளர்களை, (தரம் iii நிறைவேற்றுத்தரச் சேவை) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021

வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களத்தில் உதவி வர்த்தகப் பணிப்பாளர் பதவிக்காக (06 வெற்றிடங்கள்) இந்த அறிவித்தலில் விதித்துரைக்கப்பட்ட தேவையான தகைமைகளைக் கொண்டிருக்கும் பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள திகதியன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்கத்தக்கதாக ”பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஸ்தாபனம், பரீட்சைகள் மற்றும் அமைப்பு கிளை, இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தபால் பெட்டி இல. 1503, கொழும்பு” எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

வேலை விபரணம் DOWNLOAD
விண்ணப்ப படிவம் DOWNLOAD

விண்ணப்பத்தினைக் கொண்டுள்ள தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் ”வர்த்தக திணைக்களத்துக்கான தரம் iii இனைச் சேர்ந்த உதவிப் பணிப்பாளர்களினை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை” எனத் தெளிவாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

(அ) விண்ணப்ப முடிவுத் திகதி 2021.06.04 ஆகும்.

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்