உதவிப் பணிப்பாளர் வேலைவாய்ப்பு மட்டுப்படுத்திய போட்டிப் பரீட்சை – அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

Assistant Director Jobs Vacancies - Government Services Commission

உதவிப் பணிப்பாளர் வேலைவாய்ப்பு மட்டுப்படுத்திய போட்டிப் பரீட்சை – அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் நிறைவேற்று சேவைத் தொகுதியில் திணைக்களத்துடனான தரம் iii இன் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணி உபயோகம்) பதவிக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்திய போட்டிப் பரீட்சை – 2018 / (2021)

இத்திணைக்களத்தில் நிறைவேற்று சேவைத் தொகுதியில் தரம் iii இன் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணி உபயோகம்) பதவியில் நிலவுகின்ற 7 வெற்றிடங்களை நிரப்புவதற்காக பின்வரும் தகைமைகளைக் கொண்டுள்ள அலுவலர்களிடமிருந்து அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளைப்படி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தப் பரீட்சையானது பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் 2021, ஓகத்து மாதம் கொழும்பு மாவட்டத்தில் நடாத்தப்படும்.

வேலை விபரணம் DOWNLOAD
விண்ணப்ப படிவம் DOWNLOAD

இவ்வறிவித்தலின் இறுதியில் காட்டப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தின் பிரகாரம், விண்ணப்பங்களை பின்வரும் திகதியில் அல்லது அதற்கு முன்னர் ”பணிப்பாளர், நாயகம், காணி உபயோகத் திட்டமிடல் திணைக்களம், இலக்கம் 31, பதிபா மாவத்தை, நாராஹேன்பிட்ட, கொழும்பு 05″ எனும் முகவரிக்கு கிடைக்கக்கூடியதாக பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணி உபயோகம்) பதவிக்கான மட்டுப்படுத்திய போட்டிப் பரீட்சை – 2018 (2021)” என்று தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்