விளையாட்டு கல்வி கற்கை – தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவகம்

உடல் தகுதி பயிற்றுவிப்பாளர் பயிற்சி கற்கை நெறி – NVQ-01

விண்ணப்ப படிவ download link இந்தப் பதிவின் கீழ் பகுதியில் உள்ளது

உடல் தகுதி பயிற்றுவிப்பாளர் பயிற்சி கற்கை நெறி ( NVQ – 04 ) நாட்டில் அதிகரித்துள்ள தொற்றா நோய் சம்பவங்களை தடுக்கும் நோக்குடன் உடற்பயிற்சித் திட்டங்களுக்காக விஞ்ஞான அறிவு மற்றும் நடைமுறை திறன்களைக் கொண்ட உடல் தகுதி பயிற்றுநர்களை உருவாக்குவதற்கு இந்த கற்கை வடிவமைக்கப்பட்டுள்ளது .

தேசிய தொழில் தகைமை அளவு 04 ( NVQ – 04 ) இற்கு அமைவாக இந்த கற்கை நடத்தப்படுவதோடு இந்த கற்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்கள் உடல் தகுதி நிலையம் / உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு உடல் தகுதி பயிற்றுவிப்பாளராக தமது தொழில் வாழ்வை ஆரம்பிக்க முடியும் .

காலம் : 12 மாதங்கள் , ( மு.ப. 9.00 மற்றும் பி.ப. 4.00 இற்கு இடையே சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் )

கற்கை கட்டணம் : ரூபா 20,000 / =

மொழி : சிங்களம் / ஆங்கிலம்

தகைமைகள் : விளையாட்டு பின்புலத்துடன் க.பொ.த. ( சாதாரண தரத்தில் ) சித்தி பெற்றிருத்தல் வேண்டும் .

மேலதிக விபரத்திற்கு : கற்கை ஒருங்கிணைப்பாளர் 011 2684921 நீடிப்பு 234

பயிற்சியாளர் திறன் அபிவிருத்தி சான்றிதழ் கற்கை நெறி

விளையாட்டு பயிற்சியாளர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்த கற்கை நடத்தப்படுகிறது . கைப்பந்து , சைக்கிளோட்டம் , சவாட் கிக் , குத்துச்சண்டை , வலைப்பந்து , கரப்பந்து மற்றும் ஹொக்கி பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .

கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்கள் குறித்த விளையாட்டில் ஒரு தகுதியுடைய பயிற்சியாளராக அங்கீகரிக்கப்படுவார் . அவர்கள் இந்த அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு “ பயிற்சியாளர் பதிவுச் சான்றிதழ் ” வழங்கப்படும் .

காலம் : 03 மாதங்கள் ( மு.ப. 9.00 மற்றும் பி.ப. 4.00 இற்கு இடையே சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் )

மொழி : சிங்களம் / ஆங்கிலம் ‘ வேலை கற்கை

கட்டணம் : ரூபா 5,000 / =

கற்கை அனுமதிக்கான தகைமைகள் : 

1 . பயிற்சி அளிக்கும் விளையாட்டுடன் தொடர்புபட்ட தரநிலை கற்கை ஒன்றை பூர்த்தி செய்திருத்தல் .

2 . ஒரு பயிற்சியாளராக 05 ஆண்டுகள் அனுபவம் .

3 . சர்வதேச / தேசிய / மாகாண / மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்த அனுபவம் .

மேலதிக விபரத்திற்கு : கற்கை ஒருங்கிணைப்பாளர் 011 2684921 நீடிப்பு 241

விளையாட்டு விஞ்ஞான சான்றிதழ் கற்கை நெறி – தரம் I

தொழில்முறை விளையாட்டு பயிற்சியாளர்களாக முன்னேறுவதற்கு தற்போதைய விஞ்ஞானரீதியான அறிவுடன் விளையாட்டு பயிற்சியாளர்களை தயார்படுத்தும் நோக்குடன் இந்த கற்கை வடிவமைக்கப்பட்டுள்ளது .

இந்த ஆண்டில் பேஸ்போல் , கபடி மற்றும் மல்யுத்த விளையாட்டுகளுக்காக கற்கை நடத்தப்படும் .  அரச / தனியார் துறை அமைப்பில் விளையாட்டு பயிற்சியாளர்களாக பணியாற்றுபவர்கள் மற்றும் தன்னார்வ பயிற்சியாளர்களாக பணியாற்றுபவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் .

காலம் : 06 வாரங்கள் ( ஒவ்வொரு கற்கைகளும் 60 மணித்தியாலங்கள் மு.ப. 9.00 தொடக்கம் பி.ப. 4.00 வரை வாரத்தில் 02 அல்லது 03 நாட்கள் )

மொழி : சிங்களம் / ஆங்கிலம்

கற்கை கட்டணம் : ரூபா 7,000 / =

தகைமைகள் :

1 . ஒரு திறந்த போட்டியாக இருந்தால் , மாவட்ட மட்டத்தில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை பெற்ற அல்லது மாகாண அல்லது தேசிய மட்டப் போட்டியில் முதலாவது , இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் விளையாட்டு வீராங்கனை அல்லது அணிகளுக்கு பயிற்சி அளித்திருத்தல் வேண்டும்

அல்லது மேலுள்ள அடைவை பெற்ற அணி ஒன்றில் உறுப்பினராக இருத்தல் வேண்டும் .

அல்லது

ஒரு பாடசாலை போட்டியாயின் , வலய மட்ட போட்டியில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை பெற்ற

அல்லது

மாகாண அல்லது தேசிய மட்ட போட்டியில் முதலாவது , இரண்டாவது அல்லது முன்றாவது இடத்தை பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் விளையாட்டு வீராங்கனை அல்லது அணிகளுக்கு பயிற்சி அளித்திருத்தல் வேண்டும் அல்லது மேலுள்ள அடைவை பெற்ற அணி ஒன்றில் உறுப்பினராக இருத்தல் வேண்டும் .

அல்லது

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் விளையாட்டு டிப்ளோமா கற்கை நெறியில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் .

விளையாட்டு விஞ்ஞான சான்றிதழ் கற்கை நெறி – தரம் II

9.00 – விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு சரியான விளையாட்டு தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு மற்றொரு படிநிலையாக ஜுடோ , பூப்பந்து மற்றும் கரப்பந்து விளையாட்டுத் துறைகளுடன் தொடர்புபட்டு கற்கைகள் நடத்தப்படும் .

காலம் :12 வாரங்கள் ( 120 மணித்தியாலம் , மு.ப. தொடக்கம் பி.ப. 4.00 வரை வாரத்தில் 02 அல்லது 03 நாட்கள் )

மொழி : சிங்களம் / ஆங்கிலம்

கற்கை கட்டணம் : ரூபா 10,000 / =

தகைமைகள் :

விளையாட்டு விஞ்ஞான சான்றிதழ் கற்கை நெறி தரம் | இல் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் ( ஜுடோ , பூப்பந்து மற்றும் கரப்பந்து )

அல்லது

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் விளையாட்டு டிப்ளோமா கற்கை நெறியில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் .

மற்றும்

தேசிய / மாகாண / மாவட்ட அளவில் விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனைக்கு வெற்றிகரமான பயிற்சி அளித்திருத்தல் வேண்டும் .

கவனிக்கவும் :

மேலுள்ள கற்கைகளுக்காக பதிவுசெய்யும்போது தேவையான தகைமைகளுக்கு மேலதிகமாக உயர் செயல்திறன் மற்றும் விளையாட்டு கற்கை தகைமைகளை சமர்ப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் .

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை விண்ணப்பப் படிவங்களை www.ajob.lk என்ற இணையதள முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்தல் வேண்டும் அல்லது அலுவலக நாட்களில் மு.ப. 9.00 தொடக்கம் பி.ப. 04.00 வரை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் .

விபரம் , விண்ணப்ப Download Link

Download Details

Download Application

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 2021 ஏப்ரல் 28 அன்று அல்லது அதற்கு முன்னர் ” பணிப்பாளர் , தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் , 100/7 , இன்டிபென்டன்ஸ் அவனியு , கொழும்பு 07 ” என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்புதல் வேண்டும் .

கவனிக்கவும் : விண்ணப்பத்தைக் கொண்ட கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் கற்கை / விளையாட்டின் பெயரை குறிப்பிடுதல் வேண்டும் . பணிப்பாளர் , தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் , 100/7 , இன்டிபென்டன்ஸ் அவனியு , கொழும்பு 07 .

தொலைபேசி : 0112684921

தொலைநகல் : 0112667709

 

 

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்