தொழில் திணைக்களத்தில் சுருக்கெழுத்தாளர் (தரம் III) பதவி

The Open Competitive Examination for the Recruitment to the Post of Stenographer (Grade III) in the Department of Labour – 2021

தொழில் திணைக்களத்தில் சுருக்கெழுத்தாளர் (தரம் III) பதவி வெற்றிட விண்ணப்பம்

தொழில் அமைச்சின் கீழுள்ள தொழில் திணைக்களத்தில் 2021.03.31 இல் சுருக்கெழுத்தாளர் (தரம் III) பதவிக்கு உள்ள சிங்கள மொழிமூல வெற்றிடங்கள் ஐந்திற்கும் (05), ஆங்கில மொழிமூல வெற்றிடங்கள் நான்கிற்கும் (04) தகுதியுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வேலை விபரணம் DOWNLOAD
விண்ணப்ப படிவம் DOWNLOAD

விண்ணப்ப முடிவு : 30-06-2021

தகைமைகள்

2.1 கல்வித் தகைமைகள்

  • க.பொ.த. (சா.த.) பத்திரப் பரீட்சையில் ஒரே தடவையில், சிங்களம் / தமிழ் / ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களிலும் மேலும் இருபாடங்களிலும் திறமைச் சித்திகளுடன், ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
    மற்றும்,
  • க.பொ.த. (உ.த.) பத்திரப் புதிய பாடத் திட்டத்தின் கீழ் பரீட்சையில் (பொது அறிவு மற்றும் பொதுவான ஆங்கிலப் பாடங்கள் தவிர்ந்த) ஏதேனும் ஒரு பாடத்தில் சித்தியடைந்திருத்தல்.

2.2 தொழிற் தகைமைகள்

  • சிங்கள சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் சிங்கள மொழியிலான ஆறு மாதங்களுக்குக் குறையாத காலத்திற்குரிய சுருக்கெழுத்துப் பயிற்சிநெறியைப் ப{ர்த்தி செய்திருத்தல் அல்லது, க.பொ.த. (சா.த.) பத்திரப் பரீட்சையில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு (சிங்கள மொழி மூலம்) பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல்.
  • ஆங்கில சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் ஆங்கில மொழியிலான ஆறு மாதங்களுக்குக் குறையாத காலத்திற்குரிய சுருக்கெழுத்துப் பயிற்சி நெறியைப் ப{ர்த்தி செய்திருத்தல் அல்லது, க.பொ.த. (சா.த.) பத்திரப் பரீட்சையில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுப் (ஆங்கில மொழி மூலம்) பாடத்தில் திறமைச்சித்தி பெற்றிருத்தல்.

பரீட்சைக் கட்டணம்-

பரீட்சைக் கட்டணத்தைச் செலுத்துதல் விண்ணப்பதாரி இவ் அறிவித்தலின் பிரதி ஒன்றினையும், பொது118 படிவத்தில் பரீட்சையின் பெயரைக் குறிப்பிட்டு தொழில் திணைக்கள தலைமை அலுவலகம் சிறாப்பர் அல்லது விண்ணப்பதாரருக்குச் சமீபமாக உள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தின் காசாளரிடம் 2003-02-99 என்ற தலைப்பிற்கு பரீட்சைக் கட்டணமான ரூபா 500.00 ஐ விண்ணப்பிக்கவேண்டிய இறுதித் திகதிக்கு முன்பாக அல்லது அன்றோ செலுத்தி பொது 172 என்ற பற்றுச்சீட்டினை பெற்று அதனை விண்ணப்ப்ப்படிவத்தில் அதற்குக் குறித்த உரிய இடத்தில் இலகுவில் அகற்ற முடியாதவாறு உறுதியாக ஒட்டப்படல் வேண்டும்.

(பற்றுச் சீட்டின் பிரதி ஒன்றைத் தம்வசம் வைத்துக்கொள்வது பிரயோசனமாக அமையும்.)

குறிப்பு – ஒரு முறை செலுத்தப்பட்ட பரீட்சைக் கட்டணமானது இப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டாலன்றி எக்காரணம் கொண்டும் திருப்பப் பெற்றுக் கொள்ள முடியாது மேலும் இப் பரீட்சைக்குச் செலுத்தப்பட்ட கட்டணம் இன்னொரு பரீட்சைக்குக் கட்டணமாகவும் மாற்றவும் முடியாது.

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முறை.-

பிழைகளின்றிப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 2021 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் 30 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ”பணிப்பாளர் அதிபதி, தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகம், இரண்டாம் தளம், தொழிற் செயலகம், நாரேஹேன்பிட்டி, கொழும்பு – 05″ என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை   குறிப்பிடப்படுதல் வேண்டும். தபாலில் பிந்திக் கிடைக்கும் அல்லது காணாமற் போகும் விண்ணப்பங்கள் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.

Checklist :

 

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்