சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா பாடநெறி 2021

Two year diploma course in social work 2021

சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா பாடநெறி

சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா பாடநெறியின் 2020 / 2021 கல்வியாண்டுக்காக மாணவ /மாணவிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்பாடநெறியின் நோக்கம் சமூக சேவை, சமூக நலன்புரி மற்றும் சமூக அபிவிருத்தி துறைகளுக்கு தேவையான விஞ்ஞானபூர்வமான அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு உள்ள சமூகப் பணியாளர்களை உருவாக்குவதாகும்.

1. அடிப்படைத் தகைமைகள்.-

(i) க. பொ. த. (உ./த.) பரீட்சையில் சித்தி எய்தியிருத்தல் (03 பாடங்களில் திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.)

அல்லது

(ii) (அ) அரச அல்லது மாகாண சபை, அல்லது உள்ளூராட்சி சேவையில் கீழ்க்காணும் பதவி ஒன்றில் (அல்லது பல பதவிகளில்) 03 வருடங்களுக்கு குறையாத திருப்திகரமான சேவையைப் ப{ர்த்தி செய்திருத்தல்.

A4 தாளில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை 2021.05.17 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்ககூடியவாறு ”பதிவாளர், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் லியனகேமுல்ல, சீதுவை” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பங்களை நேரில்வந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

தற்போது தொழில் புரிவோரின் விண்ணப்பங்கள் அவர்களின் தொழில்தருநர் ஊடாக அனுப்பப்படல் வேண்டும்.

அடிப்படைத் தகவல்களை பூர்த்தி செய்யாத, ஒழுங்காக பூரணப் படுத்தப்படாத மற்றும் குறித்த திகதிக்குள் கிடைக்கப்பெறாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவுறுத்தலுமின்றி நிராகரிக்கப்படும்.

விபரணம் DOWNLOAD
விண்ணப்ப படிவம் DOWNLOAD

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்